செஞ்சி மாரியம்மன் கோவிலில் நோம்பு எடுக்க பெண்கள் குவிந்தனர்
ADDED :1157 days ago
செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் விரதமிருந்து கேதார கவுரி நோம்பு எடுத்தனர்.
சிவனுக்கு உரிய விரதங்களில் ஒன்றாக கேதார கவுரி விரதம் உள்ளது. ஐப்பசி மாதம் அமாவாசையன்று இதை கடை பிடிக்கின்றனர். சக்தி தேவியை வேண்டி பெண்கள் விரதமிருந்து இந்த நோம்பை எடுக்கின்றனர். செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பார்வதி தேவியை குறிக்கும் வகையில் கும்மபம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். விரதம் இருந்த நுாற்றுக்கணக்கான பெண்கள் அவரவர் வீட்டு வழக்கப்படி பாரம்பரிய முறையில் நோம்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். மாலை 4.29 மணிக்கு சூரிய கிரகணம் என்பதால் பகல் 12 மணிக்கும் நோம்பு எடுக்க ஒரே நேரத்தில் பெண்கள் குவிந்ததால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.