உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார கௌரி நோன்பு எடுக்க கோவில்களில் குவிந்த பெண்கள்

கேதார கௌரி நோன்பு எடுக்க கோவில்களில் குவிந்த பெண்கள்

விழுப்புரம் : தீபாவளியை தொடர்ந்து வந்த அமாவாசை தினமான இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவில்களில் கேதார கௌரி நோன்பு எடுக்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அதையொட்டி திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் மற்றும் பாப்பாத்தி அம்மன் கோவிலில் நோன்பு எடுக்க அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன் சன்னிதிகளில் நோன்பு சட்டியுடன் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நோன்பு எடுத்தனர். இன்று இரண்டு மணியோடு சூரிய கிரகணத்தால் கோவில்கள் மூடப்படுவதால், ஏராளமானோர் காலையிலேயே கோவில்களில் சாமி தரிசனம் செய்து நோன்பு எடுத்து வீடு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !