மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1046 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1046 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1046 days ago
மேட்டுப்பாளையம்: சிறுமுகை ராஜகணபதி கோவிலில், வருகிற, 31ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண வைபவம் நடத்த, கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.சிறுமுகை வ.உ.சி., வீதி அருகே ராஜ கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. கோவில் நிர்வாகக் குழுவில் கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. கவுரவத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினர். கோவில் மேல்கூரை பழுதடைந்துள்ளதால், அதற்கு சுருக்கி போடுவது. 30ம் தேதி சூரசம்கார விழா நடத்துவது. 31ம் தேதி வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண வைபவம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சுப்பையன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். துணைத் தலைவர் பழனிசாமி, உறுப்பினர்கள், பாலாஜி, கணேசன், பத்மா உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
1046 days ago
1046 days ago
1046 days ago