காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை
காளஹஸ்தி : காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று சூரிய கிரகணம் என்பதால் கூடுதலாக ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர்.
காளஹஸ்தி கோவில் இதே போல ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நாட்டிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும். மேலும் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு, கேது க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை அனைத்து 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 ராசிகளையும் உள்ளடக்கியது. இதனாலேயே இந்த சிவனுக்கு சூரிய மண்டலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு கேது பரிகார தலமாக உள்ளது. எனவே கிரகணத்தால் கோவிலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய, சந்திர கிரகணத்தன்று சிவபெருமானையும், ஞான பிரசுனாம்பா அம்பாளையும் வழிபட்டால், ஒரு நபர் அவர்களின் ஜாதக தோஷங்களிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. சூரிய கிரகணம் என்பதால் காளஹஸ்தி சிவன் கோயிலில் கூடுதலாக ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர்.