வடபழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகல துவக்கம்
சென்னை: சென்னை வடபழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.
முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 30ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இன்று (26ம் தேதி) இரவு சந்திர பிரபை வாகனத்திலும், நாளை ஆட்டுக்கிடா வாகனத்திலும், 28ம் தேதி நாக வாகனத்திலும் 29ம் தேதி மங்கள கிரி விமானத்திலும் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடக்கிறது. 30ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 31ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 1ல் வடபழநி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 2ம் தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 3ம் தேதி வடபழநி ஆண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும், 4ம் தேதி அருணகிரிநாதர் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிகான ஏற்பாடுகளை தக்கார் எல். ஆதிமூலம் அவர்கள், செயல் அலுவலர் முல்லை ஆகியோர் செய்து வருகின்றனர்.