சூரிய கிரகணத்தில் செங்குத்தாக நின்ற உலக்கை; வழிபாடு செய்த பக்தர்கள்
ADDED :1082 days ago
ஆத்தூர்: சூரிய கிரகணத்தின்போது, சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் வீடுகளின் முன் உலக்கையை நிறுத்தி வைத்து, வழிபாடு செய்தனர். மஞ்சள் நீர் ஊற்றிய தாம்பளத்தில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தினர். இந்த உலக்கை, சூரிய கிரஹணத்தின்போது கீழே விழாமல் நின்றது. கிரஹணம் முடிந்ததும் கீழே சாய்ந்தது. இதுபோன்ற வழிபாடுகளால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளதாக, ஆத்துார் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறினர்.