பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி இரண்டாம் நாள் விழா
ADDED :1439 days ago
பழநி : பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது . கந்த சஷ்டி இரண்டாம் நாள் விழாவில், மண்டகப்படியில் பழநி விஸ்வ பிராமண மகாஜன சங்கம் சார்பில் சிறப்பு அலங்காரத்தில் சின்ன குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அக்.,31 வரை நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,30 மாலை சூரசம்ஹாரம், 31ல் திருக்கல்யாணம் நடக்கிறது.