காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை ஆதிசேஷ பதஞ்சலி மகரிஷி குருபூஜை விழா
ADDED :1152 days ago
மதுரை, பழங்காநத்தத்தில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் சத்குருவாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஆதிசேஷ பதஞ்சலி மகரிஷிக்கு நாளை 29ம் தேதி மாலை 6.40 மணி அளவில், மாதாந்திர மூல நட்சத்திரம் குருபூஜை நடைபெற இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டும் என பதஞ்சலி ஞானசபையினர் தெரிவித்துள்ளனர்.