மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா
ADDED :1152 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அமைந்துள்ள் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழாவின் இரண்டாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிவசுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரனை சம்ஹாரம் செய்ய முருகர் வேல் வாங்கும் உற்சவம் நாளை நடக்கிறது. 30ம் தேதி, சூரசம்ஹார விழாவும், 31ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, நிர்வாக அறங்காவலர் டாக்டர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.