உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டத்தில் நாளை சூரசம்ஹாரம்

கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டத்தில் நாளை சூரசம்ஹாரம்

காஞ்சிபுரம்: கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். இதில் ஆறாம் நாளான நாளை கந்தசஷ்டியும், இரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் இரவு, தெய்வானையம்மையார் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும், மாலை 6:30 மணிக்கு குமரன் கலையரங்கில், திருப்பனந்தாள் காசிதிருமடத்தின் சார்பில், தெய்வசிகாமணி கந்தபுராயணம் சொற்பொழிவு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !