திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம் நிறைவு
ADDED :1076 days ago
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 10 நாட்கள் நடந்த ஊஞ்சல் உத்ஸவம் நேற்று நிறைவடைந்தது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உத்ஸவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்.,23ம் தேதி உத்ஸவம் துவங்கியது. விழா நாட்களில் காலையில் சிறப்பு பூஜைகள், மாலை 5.30 மணியிலிருந்து 7 மணிக்குள் ஜீயர் முன்னிலையில் திருவாராதனம், ஊஞ்சல் பாட்டு, தீபாராதனை நடந்தது. உத்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை ஜீயர் முன்னிலையில் சிறப்பு தீபாராதனை, திருவாய்மொழி சேவாகாலம், ஊஞ்சல் பாட்டு நடந்தது. 10 நாள் உத்ஸவம் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.