கள்ளக்குறிச்சி கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம் நிறைவு
ADDED :1233 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்த மணவாள மாமுனிகள் உற்சவத்தின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி பெருமாள், தாயார், உபயநாச்சியார் உற்சவமூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து கோவில் உள்பிரகார வலம் சென்றது. மாலையில் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, மணவாள மாமுனிகள் மற்றும் ஆழ்வார்களுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. பெருமாள், தாயாருக்கு சாற்றுமுறை, சேவை, ஆராதனம் நடத்தி, விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்தனர். தேசிக பட்டர் குழுவினர் வழிபாட்டினை செய்து வைத்தனர்.