உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலமங்கலத்தில் சுவாமிகளை குளிரவைக்க சிறப்பு பூஜை

நீலமங்கலத்தில் சுவாமிகளை குளிரவைக்க சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் கும்பாபிஷேகம் நடந்த கோவில்களில் சுவாமிகளை குளிரவைக்க சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் மகாசக்தி மாரியம்மன், கெங்கையம்மன், பெரியாண்டவன், நவநீதகிருஷ்ணன் கோவில்களில் கும்பாபிேஷகம், மண்டலாபிேஷக பூர்த்தி விழாவும் நடந்து முடிந்தது. தொடர்ந்து கிராம சம்பிரதாயப்படி அம்மன்களை குளிரவைக்கும் பூஜைகள் நேற்று மாலை நடந்தது. காசக்தி மாரியம்மனுக்கு காளி அலங்காரம் செய்து வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பரமசிவம், கோவிந்தன் ஆகிய பூசாரிகள் பம்பை, உடுக்கை பாட்டுடன் குளிரவைக்கும் வழிபாடுகளை நடத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெண் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !