உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் கல்லறை தினவிழா கொண்டாடப்பட்டது

காரைக்காலில் கல்லறை தினவிழா கொண்டாடப்பட்டது

காரைக்கால்: காரைக்காவில் கல்லறை தினத்தையொட்டி கிறிஸ்துவர்கள் மறைந்த தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பிராத்தனை செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் கல்லறை தினத்தையொட்டி கிறிஸ்துவ மக்கள் மறைந்த தங்கள் உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து. மெழுகு வர்த்தி ஏந்தி பிராத்தனை செய்தனர். காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள பெரியகல்லறை.கோட்டுச்சேரி.கீழகாசாக்குடி மற்றும் காமராஜர் சாலையில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்துவர்கள் பிராத்தனை செய்தனர். சிலர் கல்லறைகளுக்கு புதிதாக வர்ணம் பூசி மலர்களாகல் அலங்கரித்த முன்னோர்கள் விரும்பிய உணவுகளை வைத்து உறவினர்கள் பிராத்தனை செய்தனர்.இதில் ஏராளமான கிருஸ்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !