உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடுமுறை தினத்தில் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

விடுமுறை தினத்தில் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு, பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாண கடல் பகுதி, கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பின் காரணமாக, கடல் நீர்மட்டம் உயர்ந்து நவக்கிரகங்கள் கடல் நீரில் மூழ்கின. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, கடலுக்குள் உள்ள நவக்கிரங்களை கடல் நீரில் இறங்கி சுற்றி வந்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பக்தர்கள் வருகை குறைந்து இருந்த நிலையில், ஞாயிறு விடுமுறை என்பதால், வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் நேற்று ஏராளமானோர் நவபாஷாணத்திற்கு வருகை தந்தனர். கடல் நீர்மட்டம் உயர்ந்த வகையில் நேற்றும் இருந்ததால், நவபாஷாண நடைமேடை வழியாகவே பக்தர்கள் சுற்றி வந்து நவக்கிரங்களை தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !