நத்தம் அருகே பாண்டிமுனீஸ்வரர் சக்தி பீடம்: பக்தர்கள் தரிசனம்
நத்தம், நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள இடையபட்டியில் ஸ்ர பாண்டி முனீஸ்வரர் சக்திபீட ஆலயதிறப்புவிழா நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாவதி பூஜைகள் நடந்தது. நேற்று அகோராஸ்திர ஹோமம், துர்கா ஹோமம், கௌரி ஹோமம், சரஸ்வதி மேதா பூர்ணாவதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், யாகங்களும் நடந்தது. இதை தொடர்ந்து பாண்டிமுனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், மகா தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் உப தெய்வங்களான விநாயகர், முருகன் ,எட்டுக்கை காளியம்மன், மகா விஷ்ணு, துர்க்கை, சக்தி நாகம்மாள், வராஹிதேவி, குபேரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், வெனி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பாண்டிமுனி உபாசகர் மாதேவி கவிதா அம்மா செய்திருந்தார்.