சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :1066 days ago
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கல்பாத்தி தேர் திருவிழா புகழ்பெற்றது. திருவிழாவையொட்டி, சாத்தபுரம் பிரசன்னம் மகா கணபதி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று கோலாகலமா நடந்தது.
நேற்று காலை சூத்திர புண்ணியாகம், விஸ்வரூபம் திருவரதானம், அக்னி பிராணாயானம், யுக்த ஹோமம், அனந்த ஹோமம், பூர்ணஹூதி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பிறகு கோபூஜை, மகா தீபாராதனை, ரதப் பிரதிஷ்ட்டை, ரத கும்பாபிஷேகம், பலி, சுவாமி எழுந்தருளல், ரத சமர்ப்பணம், சுவாமி ரதாரோஹணம், நிவேதியம், தீபாராதனை, சுவாமி ரத அவரோகணம், ஆலய பிரதிக்ஷணம், மகா நிவேதியம், மகா தீபாராதனை, ஆசீர்வாதம் அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 3.30 மணி அளவில் தேர் வெள்ளோட்டம் கிராம வீதிகளில் நடைபெற்றனர். இதற்கான ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.