உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை சந்திர கிரகணம் : ராமேஸ்வரம் கோயில் நடைசாத்தல்

நாளை சந்திர கிரகணம் : ராமேஸ்வரம் கோயில் நடைசாத்தல்

ராமேஸ்வரம்: நாளை (நவ., 8) சந்திர கிரகணம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடைசாத்தப்பட உள்ளது.

நவ., 8 ல் சந்திர கிரகணம் மாலை 5:47 முதல் 6:26 வரை நடக்க உள்ளது. இதனையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் காலை 11 மணிக்கு சாயரட்ச பூஜை நடத்தப்படும். மதியம் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பின் மாலை 4:32 மணிக்கு கோயில் இருந்து தீர்த்தவாரி சுவாமி புறப்பாடாகி, மாலை 5:50 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதன் பின் வீதி உலா நடக்கும். மாலை 6:45 மணிக்கு நடை திறந்து, கிரகண அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கும். எனவே அன்று அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும், இரவு 7: 15 மணி முதல் நடை சாத்தப்படும் வரை கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !