ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் ஆண்டு விழா
ADDED :1067 days ago
சோமனூர்: ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சோமனூர் அடுத்த ராமாச்சியம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 12 வது ஆண்டு விழா பூஜைகள், நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.