உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலமுந்தலில் கும்பாபிஷேக விழா

மேலமுந்தலில் கும்பாபிஷேக விழா

சிக்கல்: வாலிநோக்கம் அருகே மேலமுந்தலில் உள்ள சர்வசித்தி விநாயகர், முனீஸ்வரர், உஜ்ஜையினி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கடந்த நவ.5ல் கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. அனுக்ஞை, வாஸ்து சாந்தி, எந்திரப்பிரதிஷ்டை, பூர்ணாஹூதி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 11:00 மணியளவில் உஜ்ஜையினி காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமானக்கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !