உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை காமாட்சியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

உடுமலை காமாட்சியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

உடுமலை: உடுமலை, நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், திருப்பணி மேற்கொள்ளும் வகையில், பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

இதற்காக, நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜைகள் துவங்கியது. வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், விமான கலசங்கள் பாலஸ்தாபனம் செய்து, தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, நிறை வேள்வி, மகா தீபாராதனை, கடம்புறப்பாடு, சுவாமிகளுக்கு, பாலஸ்தாபன கும்ப தீர்த்த அபிேஷகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !