சந்திர கிரகணம் : இருக்கன்குடி கோயில் நடை சாத்தப்படுகிறது
ADDED :1066 days ago
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் பின்வருமாறு: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் எதிர்வரும் நவம்பர் 8ல் சந்திர கிரகணம் காரணமாக பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடை சாற்றப்பட்டு இருக்கும் மாலை 6:30 மணிக்கு மேல் அபிஷேகம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.