உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா

வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா

மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையத்தில் உள்ள, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், முதலாம் ஆண்டு விழாவும், பிரதோஷ விழாவும் நடந்தது.

சிறுமுகை அருகே ஜடையம்பாளையத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று, ஓராண்டு முடிந்ததை நினைவு கூறும் வகையில், முதலாம் ஆண்டு விழாவும், சனி பிரதோஷ விழாவும் நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. ஞானஸ் கந்த இறை வழிபாட்டு குழு சிவ ஸ்ரீ நந்தகுமார் சுவாமிகள் தலைமையில், கனிஷ்குமார் யாக வேள்விகளை நடத்தினார். பிறகு சனி பிரதோஷ பூஜை நடந்தது. பின் நந்திக்கும், வெள்ளிங்கிரி ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. தீபாராதனை நடந்த பின் காசி விஸ்வநாதர் அலங்காரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, 6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஜடையம்பாளையம் ஊர் கவுடர், பொதுமக்கள், வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர் குழுவினர், ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !