பகவான் கிருஷ்ணருக்கு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :1065 days ago
சூலூர்: இஸ்கான் அமைப்பு சார்பில், தாமோதர மாத தீபத் திருவிழா சூலூரில் நடந்தது.
சூலூர் கலங்கல் ரோடு மண்டபத்தில், இஸ்கான் சார்பில் நடந்த தாமோதர மாத தீப திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு, கார்த்திகை மாதத்தில், தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், பல யாகங்கள் செய்த பலனையும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும் பெறுவார்கள். இதுகுறித்து பல்வேறு புராண நூல்களில் விளக்கப்பட்டுள்ளது என, இஸ்கான் அமைப்பினர் கூறினர். தொடர்ந்து பஜனை மற்றும் தீப வழிபாடு குறித்த ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, தீபங்களை ஏற்றி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.