உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்

தஞ்சை பெரிய கோவில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், லிங்கம், 12 அடி உயரமும், ஆவுடையார், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார். பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப் பட்டது. இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !