மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையத்தில் புனருத்தாரன கோயில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் இன்று நடை பெற்றது.
கொமாரபாளையத்தில் உள்ள மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நவ.,4ம் தேதி இரவு 12மணிக்கு கிராமசாந்தி பூஜையுடன் ஆரம்பமானது. காலை,6மணிக்கு மங்கள இசையுடன் திருவிளக்கு பூஜை, மஹா சங்கட ஹர கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், மஹாபூர்ணாஹீதி தீபாரதனை, நடைபெற்றது. அதைதொடரந்து வரசித்தி விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தசங்கரஹனம், கோபூஜை முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இரவு 7மணிக்கு கும்பஅலங்காரம், கலாகர்ஷனம் திருக்குடங்கள் யாகசாலைபிரவேசம்நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி பூத சுத்தி, இரண்டாம் கால யாகவேள்வி, தொடர்ந்து மஹா தீபராதனை, மதியம் பிம்பசுத்திஅபிஷேகம், மூன்றாம் காலயாகவேள்வி இரவு 10மணிக்கு அம்பாளை பீடத்தில் நிறுத்துதல், இன்று அதிகாலை 5.30க்கு நான்காம் கால யாகம், மூலமந்திரயஸகங்கள் சர்சாஹீதி, நாடிநந்தனம், நாம கரணம்,96சன்னதி மஹாஹோமம்,வசோத்ர மஹா பூர்ணாஹீதிமஹா தீபாரதனை, கடம்புறப்பாடு, யாத்ரா தானம், காலை 10.30,க்கு கோபுர மஹா கும்பாபிஷேகம், நடைபெற்றது. மஹா தீபாரதனை, அலங்காரபூஜை, அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம், வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா டாக்டர். நித்திய சிவ ஸ்ரீ கோவிந்தராஜ சாஸ்திரிகள் தலைமையில்,நித்திய சிவஸ்ரீகோவிந்தராஜ சாஸ்திரிகள், கும்பாபிஷேக க்ரியானந்த ஜோதி ஸ்ரீராமசந்திர சிவம்,அலங்கார பூஷனம், ஸ்ரீநாவலன் சிவம், அலங்கார ரத்னா ஸ்ரீமாணிக்கம் சிவம்,ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்க்கு பெருந்துறை, மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சேலம், பவானி, சத்தியமங்கலம், உள்ளிட்ட ஊர்களிலிருந்து 1000க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.