மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்
மயிலாடுதுறை: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு புகழ்பெற்ற மயூரநாதர் கோயில், மாதானம் அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனால் உணவு பஞ்சம் நீங்கும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி ஆலயத்தில் சுவாமிக்கு பால் பன்னீர் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நெல் அரிசி சாதம் கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை மற்றும் சோடச ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இது போல் சீர்காழி தாலுகா மாதானத்தில் அமைந்துள்ள அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.