உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி. ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம்

ஸ்ரீவி. ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னதியில் பெரிய பெருமாள் ஐப்பசி பவுர்ணமி ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு கோபால விலாச மண்டபத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி எழுந்தருளினர். அனிரூத் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !