உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி பவுர்ணமி: காளஹஸ்தி சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஐப்பசி பவுர்ணமி: காளஹஸ்தி சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று  திங்கட்கிழமை ஐப்பசி மாத  பவுர்ணமி திங்கட்கிழமையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண் பக்தர்கள் கோயில் வளாகத்தில்  தீபங்களை ஏற்ற ஒதுக்கப்பட்ட நான்கு பகுதிகளிலும் ஏராளமானோர்  தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.


மேலும் கோயில் சார்பில் ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை ஏற்றப்பட்டு கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு கலந்து கொண்டு வழிபட்டனர் . மேலும் வளாகம் முழுவதும் தீபங்களால் பிரகாசமானது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்யப்பட்டிருந்தது .வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவும்  தீபங்களை ஏற்றி  வழிபடவும் வருவர் என்று எதிர்பார்த்த கோயில் அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ததோடு பக்தர்களுக்கு  இலவச பிரசாதங்களையும் பிரசாத மையங்களில் பக்தர்களுக்கு தேவையான லட்டு வடை புளியோதரை ஜிலேபி போன்றவை தேவையானவற்றை விற்க வைக்கப்பட்டிருந்தன  என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று        .    ஐப்பசி  பவுர்ணமியையொட்டி மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது மேலும் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மற்றும் கோயிலில் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டதோடு இன்று மாலை ஊஞ்சல் சேவை மற்றும் உற்சவ மூர்த்திகளை  மாட வீதிகளில் ஊர்வலம் நடத்தினர் .இதே போல்  வரசித்தி விநாயகர் கோயிலின் துணை கோயிலான  மணிகண்டேஸ்வர சுவாமி கோயிலிலும் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி ( நெல்லிக்காய்)  மரத்தின் அடியில் பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலையில் (ஜுவாலா தோரணம் )மற்றும் தீப அலங்காரம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ சுவாமி கோயிலிலும் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி  சத்யநாராயண சுவாமி விரத பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !