விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்
ADDED :1394 days ago
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அன்னாபிஷேகம், அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.