கல்பாத்தி விசுவநாதர் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பாலக்காடு: பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற கல்பாத்தி விசுவநாதர் கோவில் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாலக்காடு கல்பாத்தியில் விசாலாட்சி சமையல் விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழாவின் துவக்கமாக நேற்று காலை 7.30 மணி அளவில் வாஸ்து சாந்தி நடந்தது. 11.15 மணி அளவில் கோவில் மேல்சாந்தி பிரபு சேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. அதேபோல் திருவிழாவில் பங்கு கொள்ளும் மந்தக்கரை மகா கணபதி கோவிலும் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலிலும் சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலிலும் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இக்கோவில்களில் பல சிறப்பு பூஜைகளும் தெரு வீதிகள் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தன. தேர் திருவிழாவையொட்டி நடக்கும் சங்கீத உற்சவம் இன்று மாலை சாத்தபுரம் மணி ஐயர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளார் கலையரங்கில் ஆரம்பிக்கின்றன. வரும் 14 ,15 , 16ம் தேதிகளில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. இதையடுத்து வரும் 16ம் தேதி பாலக்காடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து பாலக்காடு மாவட்ட கலெக்டர் மிருண்மயி ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.