உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணத்தின் போது நின்ற உலக்கைகள்

சந்திர கிரகணத்தின் போது நின்ற உலக்கைகள்

உசிலம்பட்டி: சூரிய, சந்திர கிரகணங்கள் நடக்கும்போது எப்போது துவங்கி எப்போது முடியும் என கிராமத்தினர் வீடுகளில் உள்ள உலக்கைகளை நிறுத்தி கணித்து வந்துள்னர். நேற்று சந்திரகிரகணம் நடைபெற்ற போது உசிலம்பட்டி வைரலிங்க ஆசாரி தெருவில் வீடுகளின் முன்பாக உலக்கைகளை நிறுத்தி பார்த்தனர். இது குறித்து சுப்பிரமணி கூறியதாவது: எங்கள் அயோத்திபட்டி கிராமத்தில் உலக்கைகளை நிறுத்தி பார்த்துள்ளேன். இந்த சந்திரகிரகணத்தின் போது உலக்கை நிற்கிறதா என பார்க்க கடந்த சில நாட்களாக நிறுத்தி பார்த்தேன். அப்போது நிற்காத உலக்கை கிரகணம் ஆரம்பித்தவுடன் எந்த பிடிமானமும் இல்லாமல் நின்றது. முதலில் வீட்டுக்குள் நிறுத்தி பார்த்து நின்றதால், மற்றவர்களும் இதனை பார்க்க வீட்டின் முன்பகுதியில் நிறுத்தியவுடன் நின்றது என்றார். இவரது வீட்டில் உலக்கை நின்றதை பார்த்து பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் தங்கள் வீடுகளில் மூலையில் கிடந்த உலக்கைகளை நிறுத்தி பார்த்து அதிசயித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !