மகா சித்தர் மாயாண்டி சுவாமி மடாலயத்தில் அன்னாபிஷேகம்
ADDED :1148 days ago
ஆழ்வார்திருநகரி: ஆழ்வார்திருநகரி மகா சித்தர் மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில் பவுர்ணமி தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடக்கிறது. ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம், அன்னாபிஷேகம், திருவிளக்கு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு உபயதாரர்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.