உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

கடலூர் : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.


ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி, திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !