அண்ணாமலையார் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா
மானாமதுரை: மானாமதுரை அண்ணாமலையார் விநாயகர் கோயில் 4 ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் முன்பாக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்களில் புனித நீா் வைத்து யாகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூா்ணாஹூதி முடிந்து 11 வகையான பொருட்களால் கோயில் அர்ச்சகர் நாகமணி அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகளை செய்தார்.பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி,அமுதா உட்பட அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.