உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சூலூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சூலூர்: சூலூர் சித்தி விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் சந்தைப்பேட்டை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்து, கடந்த, 9 ம்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால ஹோமங்கள் முடிந்து, இன்று காலை, 9:00 மணிக்கு, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு, விமானம் மற்றும் சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இருகூர் கோவில்: இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பழமையான இக்கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று, கடந்த, 9 ம்தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால ஹோமங்கள் முடிந்து இன்று காலை, 8:00 மணிக்கு, அங்காளம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம் மற்றும் மகா அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். எம்.எல்.ஏ., கந்தசாமி, பேரூராட்சி தலைவர் சந்திரன், முக்கந்தர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !