ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
தொண்டாமுத்தூர்: காளியண்ணன்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
காளியண்ணன்புதூரில், ஸ்ரீ ஆதி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாகாளியம்மன், ரத்தின விநாயகர், கன்னிமார் ஆகிய தெய்வங்களும் உள்ளனர். இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 9ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை 5,:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது. காலை, 7:45 மணிக்கு, கலச புறப்பாடு நடந்தது. அதனைத்தொடர்ந்து, காலை, 8:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் தலைமையில், விமான கோபுரத்திற்கும், ஆதி விநாயகர், மாகாளியம்மன், ரத்தின விநாயகர், கன்னிமார் தெய்வங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.