உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமரத்துப்பட்டி சின்னம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்

மாமரத்துப்பட்டி சின்னம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்

செந்துறை: செந்துறை அருகே மாமரத்துப்பட்டி சின்னம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி நேற்று பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி அழைப்பு நடந்தது. தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் மகா சங்கல்யம், புன்னியாகவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்டை யாக வேள்வி பூஜைகள் நடந்தது. இன்று காலை கோமாதா பூஜை, வேதிகா பூஜை, திருமுறை விண்ணப்பம் என இரண்டு கால பூஜைகள் நடந்தது. பின் மேளதாளம் முழங்க தீர்த்தம் நிறைந்த குடம் கோவிலில் உச்சியில் உள்ள கும்பத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன் கும்பங்களின் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின் பக்தர்களுக்கு புனித நீரும், புஷ்பங்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !