சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
அன்னூர்: தாத்தம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
வடவள்ளி ஊராட்சி, தாத்தம்பாளையத்தில் பழமையான சென்னியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக கோபுரம், விநாயகர், மேடை, வீரபாகு தேவர், முன் மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை அமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 9ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. 10ம் தேதி காலையில் பாவனா அபிஷேகமும், இரண்டாம் கால கேள்வியும், இரவு மூன்றாம் கால வேள்வியும் நடந்தது. இன்று காலை 7:30 மணிக்கு, சென்னியாண்டவர், விநாயகர், வீரபாகு தேவர் மற்றும் கோபுரத்திற்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் அருளாசி வழங்கினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.