பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா
ADDED :1061 days ago
அன்னூர்: திம்மநாயக்கன் புதூர், பைரவர் கோவிலில் வருகிற 16ம் தேதி ஜென்மாஷ்டமி விழா நடைபெறுகிறது.
அன்னூர், மொண்டிபாளையம் ரோட்டில், மகா பைரவர் கோவில் உள்ளது. கொங்கு நாட்டிலேயே வடக்கு பார்த்த பைரவர் கோவில் இது மட்டும்தான் என கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று அதிக அளவில் பக்தர்கள் கூடுவர். இந்த ஆண்டு பைரவரின் ஜென்மாஷ்டமி விழா வருகிற, 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் ஜென்மாஷ்டமி நாளன்று 108 கிலோ உதிரி மலர்களால் அர்ச்சனை செய்யும் வைபவம், சிறப்பு வேள்வி பூஜை, அபிஷேக பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை பைரவாஷ்டமி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.