வலங்கைமானில் சுவாமி விவேகானந்தர் சேவா சங்கம் துவக்க விழா
ADDED :1061 days ago
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் நாளை 12ம் தேதி சுவாமி விவேகானந்தர் சேவா சங்கத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் சொற்பொழிவு, மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள், மரக்கன்று வழங்குதல் நடைபெறுகிறது. தஞ்சை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீமத் விமூர்த்தானந்தர் விழாவை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்குகிறார்.