காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் கோ சாலைக்கு நன்கொடை
ADDED :1062 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான கோ சாலைக்கு (கோ சாம்ரக்ஷனா டிரஸ்ட ) திருப்பதியை சேர்ந்த குணசேகர் ரெட்டி என்பவர் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 116 ரூபாயை நன்கொடையாக விநாயகர் கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணியிடம் வழங்கினார். இவருக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது. கோயிலுக்குள் சென்ற குணசேகர் ரெட்டி விநாயகப் பெருமானை தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கியதோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்து சாமி படத்தையும் வழங்கினர்.