திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :1166 days ago
திருவண்ணாமலை : கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தீயணைப்பு துறை சார்பில், அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு, தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
*கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.