/
கோயில்கள் செய்திகள் / கார்த்திகை மாதம் மாலை அணிந்து.. நேர்த்தியாக விரதம் துவங்கிய ஐயப்பா பக்தர்கள்
கார்த்திகை மாதம் மாலை அணிந்து.. நேர்த்தியாக விரதம் துவங்கிய ஐயப்பா பக்தர்கள்
ADDED :1054 days ago
கோவை : கார்த்திகை மாதப் பிறப்பான நேற்று, சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
நேற்று அதிகாலை கோவிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சீவேலி பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல், வடகோவை டி.வி.எஸ்., கோவைப்புதுார், ஒலம்பஸ்,ரேஸ்கோர்ஸ் வரசித்திவிநாயகர் கோவில் வளாகத்திலுள்ள ஐயப்பன் சன்னதிகளிலும், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷமிட்டனர்.