உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 108 வெள்ளி தீபங்கள் காணிக்கை

காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 108 வெள்ளி தீபங்கள் காணிக்கை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன்  கோயிலுக்கு 108 வெள்ளி தீபங்கள் பொருந்திய பர்வத ஆரத்தி தீபத்தை காணிக்கையாக ஸ்ரீ காளஹஸ்தியை சேர்ந்த ஸ்ரீதர் - உமாதேவி தம்பதியினர் வழங்கினர். இந்த வெள்ளி பர்வத தீபத்தின் மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்து 990 ரூபாய் .இதனை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு இடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது . கோயிலில் ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !