பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் குமாரசஷ்டி விழா
ADDED :1124 days ago
சாத்தூர்: வெம்பக்கோட்டை துலுக்கன்குறிச்சி வாழை மரம் பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் குமாரசஷ்டி விழா நடந்தது.
ஷஷ்டி திதியை முன்னிட்டு நடந்த இவ்விழாவின் போது சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாமிக்கு புஷ்பாஞ்சலியும் நடந்தது. இதில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.