உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: இடிகரையில் உள்ள பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவையொட்டி, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. வில்லீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து முளைப்பாலிகை எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து யாகசாலை பூஜை, வேதிகார்ச்சனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம், விக்னேஸ்வர பூஜை ஆகியனவும், விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சியும் நடந்தன. இன்று காலை பட்டி விநாயகர் கோபுர கலச கும்பாபிஷேக விழா தொடர்ந்து, தச தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை,11.00 மணிக்கு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !