மனதை ஆட்சி செய்பவர்
ADDED :1099 days ago
ஜெர்மனியின் அரசராக இருந்தவர் மகா பிரடரிக். ஒருமுறை இவர் நடந்து செல்லும் போது, முதியவர் ஒருவரைச் சந்தித்தார். முதியவரிடம், ‘‘தாங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்’’ என்று விசாரித்தார்.
‘‘நான் ஓர் அரசன். எங்கு வேண்டுமானாலும் செல்லும் சுதந்திரம் எனக்கு உள்ளது’’ என்றார்.
இதைக்கேட்டு வியப்படைந்தவர், ‘‘எந்த நாட்டுக்கு நீங்கள் அரசர்’’ என்று வினவினார்.
‘‘நான் நாட்டை ஆட்சி செய்பவன் அல்ல. என் மனதை ஆட்சி செய்பவன்’’ என்று கூறினார்.
பார்த்தீர்களா... பிறரை வெற்றி கொள்வதை விட, தன் மனதை அடக்குபவர்தான் சிறந்தவர்.