மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு...
ADDED :1042 days ago
உலகில் நாம் நலமுடன் வாழ வேண்டும் என நினைப்பவர்கள் பெற்றோர். அவர்களது வழிகாட்டுதல்படி நடக்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலையை அடைவர். ஆனால் சிலர் பத்து மாதம் சுமந்து, பாலுாட்டி சீராட்டி வளர்த்த தாயை மதிப்பதில்லை. தனக்காக வியர்வை சிந்தி உழைத்த தந்தையின் கஷ்டத்தை உணர்வதில்லை. இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இதை படித்தே ஆக வேண்டும்.
* உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.
* உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவி கொடு. உன் தாயை அசட்டை பண்ணாதே.
அதாவது பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளுக்கு ஆயுள் கூடும். வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.