நினைத்தது நடக்க!
ADDED :1098 days ago
பூலோகத்தில் வாழும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவர்கள் தேவலோகத்தில் உள்ள கற்பக விருட்ஷத்திற்கு நிகராக கோயில்களில் உள்ள தலமரத்தினை போற்றினார்கள். அந்தந்த கோயில்புராணம், தலப்பாடல்களில் அம்மரம் பற்றிய குறிப்புகள் இருக்கும். தற்போதும் பழமையான கோயில்களான மதுரை, பிள்ளையார்பட்டி... கோயில்களில் தலமரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. நேர்மையாகவும், நல்ல எண்ணத்தோடும், நல்ல சிந்தனையோடு இருந்தால் நமக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும். இந்த உயர்ந்த எண்ணத்தை மக்களிடம் பரவச் செய்வதற்கு கோயில்களில் தலமரங்களை உருவாக்கியுள்ளார்கள் முன்னோர்கள்.